திருவாரூர், ஜன. 14 –  

தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்

உலக நன்மை வேண்டி திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளில்  முதன் முதலாக  அங்கபிரதட்சணம் வழிபாடு செய்த சிவபக்தர். அதற்காக கடந்த 3 மாதங்களாக விரதம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.

சைவ சமயத்தின் தலைமைபீடமாக போற்றப்படும்  வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயமாகும்.

பல்வேறு புராதன சிறப்புகளைக் கொண்ட அவ்வாலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளின் சிறப்பினை தேவார, திருவாசக பதியங்களில் நாயன்மார்களால் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆழித்தேரோடும் 4 ராஜவீதிகளில் உலக நன்மைவேண்டி அங்கபிரதக்ஷிணம்; வழிபாடு நடத்தும் வகையில் தேவகுமார் என்ற 45 வயதுடைய சிவபக்தர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ஆழித்தேர் நிலையடி அமைந்துள்ள கிழக்கு ராஜவீதியில் உள்ள தேரடி விநாயகர் ஆலயத்தில்  சிறப்பு வழிபாட்டினை நடத்தி அங்கிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதியில் உள்ள தேர் நிலையடி வரையில் தனது வேண்டுதலான அங்கபிரதக்ஷிணம் வழிபாட்டினை தொடங்கினார்.  இதுவரை யாரும் செய்யப்படாத இத்தகைய அங்கபிரதக்ஷிண  வழிபடானது 3 மணி நேரம் வரை நீடித்து இரவு 1 மணிக்கு நிறைவடைந்தது.

சிவபக்தர் தேவகுமார் அங்கபிரதக்ஷிணம் வழிபாட்டின் போது சிவனடியார்கள், ஆன்மிகவாதிகள் சாலையினை சுத்தம் செய்தும், தேவார, திருவாசக பதியங்களை பாடியும், ஆரூரா தியாகேசா என்ற பக்தி கோஷமிட்டும் பின்தொடர்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here