திருவள்ளூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் ..
பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி இவரது மகன் வெற்றி(8) அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவரது மகன் கவின் (6) அதே பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மாலை சிறுவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிப்பதற்காக சென்று உள்ளனர்.
இந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கிய போது, நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உள்ளனர் அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் இது குறித்து சிறுவன் ஒருவனின் தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்கு வந்த கிராம மக்கள் நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற போது சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.