மயிலாடுதுறை, மே. 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், இன்று ரயில் நிலையத்திற்கு குருவை சாகுபடி பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 1289 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் அதனை லாரிகள் மூலம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தற்போது துவங்கி உள்ளது.

அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 94 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி பயிர் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 7500 ஏக்கரில் நடவு பணிகள் நிறைவடைந்துள்ளன மேலும் 1500 ஏக்கரில் குருவை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குருவை நெற்பயிருக்காக தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்வதற்கு தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 21 ரயில் வேகன்ங்கள் மூலம் உரங்கள் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

டி அபி 125 மெட்ரிக் டன் யூரியா 845 மீட்டர் கூட்டு உரம் 255 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் 64 மெட்ரிக் டன் என 1289 மெட்ரிக் டன் உரங்கள் லாரிகள் மூலம் நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் உரக்கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் அப்பணிகளை வேளாண் இணை இயக்குனர் சேகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here