காஞ்சிபுரம், ஜூலை. 02 –

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.10லட்சம் மதிப்பீலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை ,நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டாள தெரு மற்றும் செவிலிமேடு ஆகிய பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மேசை மற்றும் நாற்காலி வேண்டும் என ஆசரியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந் நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட பட்டாளத் தெரு அரசு பள்ளியில் 6.25 லட்சம் ரூபாய்  மற்றும் செவிலிமேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3.75 லட்சம் ரூபாய் என மொத்தம் 10.லட்சம் ரூபாய் மதிப்பில்  பள்ளி மாணவர்களுக்கு மேசை, நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்களை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி, மண்டலக்குழு தலைவர் மோகன், கல்வி நிலை குழு தலைவர் இலக்கியா சுகுமார்மாமன்ற உறுப்பினர் கமலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here