ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  429 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி  ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை  ஊராட்சியில் மேலபுதுக்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரக பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்ககள் குறித்து கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கைகளில் பிச்சாவலசை கிராமத்தில் பொதுக்கிணறு துார்வாரி சுத்தம் செய்தல், ஊரணியில் கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் பாராட்டுதல் தெரிவித்தனர். தற்போது நடந்த கூட்டத்தில் பஞ்சந்தாங்கி முதல் மேலபுதுக்குடி வழியாக பிச்சாவலசை வரை 2 கி.மீ. துாரத்திற்கு ரோடு செப்பணிட வேண்டும், சேதுக்கரை கடற்கரையை சுத்தம் செய்து பேவர் பிளாக் பதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர். கூட்டத்தில் தீர்மானங்களை ஊராட்சி செயலர் சாந்தி வாசிக்க மக்கள் கைதட்டி ஏகமனதாக நிறைவேற்றினர். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவியாளர் செல்வி பார்வையாளராக பங்கேற்றார். பணித்தள பொறுப்பாளர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.

மாயாகுளம் ஊராட்சி கிராம சபை கூட்டம்:

Mayagulam Panchayat Rural Council Meeting:

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில்  கிராம சபை கூட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவி பொறியாளர் சங்கு முத்து ராமலிங்கம் பார்வை யாளராக பங்கேற்க நடந்தது. கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து பேசப்பட்டன. சட்டஆலோசகர் வக்கீல் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை மாயாகுளம் ஊராட்சி செயலர் உதயகுமார் செய்திருந்தார்.

திருப்புல்லாணி ஊராட்சி கிராம சபை கூட்டம்:

Thirupullani Panchayat Rural Council Meeting:

திருப்புல்லாணி ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி செயலர் வாணிஸ்ரீ தீர்மானங்களை வாசித்தார். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலர் மலர்விழி பார்வை யாளராக பங் கேற்றார். கூட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி சுத்தம் செய்திட வேண்டும், வரத்துக் கால்வாய் களை சுத்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் களை பொது மக்கள் வைத்தனர். அதிமுக ஊராட்சி செயலர் சண்முகம், மதிமுக செல்வராஜ், எஸ்.டி.பி.ஐ., அப்துல்வகாப் உட்பட பலர் பங் கேற்றனர்.  கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று பல்வேறு பிரச்னைகள் குறித்து சர மாரியாக கேள்வி களை கேட்டனர்.  கேள்வி களால் பார்வை யாளர் உள்ளிட்ட அலுவலர்கள் திகைத்து விட்டனர். மக்களின் கேள்வி களுக்கு அதிகாரி களிடம் உரிய முறையில் ஆலோசித்து விட்டு தக்க விளக்க மளிக்கப் படும் என்றனர்.

சிக்கல் ஊராட்சி கிராம சபை கூட்டம்:
sikkal Panchayat Rural Council Meeting:

கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டப்பணிகளின் முன்னேற்ற் மற்றும் செலவின விபரம் குறித்து பேசப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விபரம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் மக்களிடம் கடலாடி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது மற்றும் ஊராட்சி செயலர் ஜெயபால் ஆகியோர் தெளிவாக எடுத்துரைத்தனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி நுாருல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here