திருவள்ளூர்,ஜூலை-11,

திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கம்பெனில் பாய்லர் வெடித்து அதில் பணிபுரிந்து வந்த 4 பேர் விபத்தில் சிக்கி அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலயே உடல் சிதறி சாவு மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.

தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்றில் கடந்த ஞாயிறன்று வெளி மாநிலத்தை சேர்ந்த ஜதேந்தர்,குந்தன்,விதூர்,மற்றும் ஷாகில் என்பவர்கள் கடந்த 15 தினங்களாக பாய்லர் லோடுமேனாக அக்கம்பெனியிலயே நங்கி பணி புரிந்து வருகிறார்கள். சம்பவத் தினமான ஜூலை 11 ஆம் தேதி காலை 0 மணியிலிருந்து அவர்கள் 4 பேரும் வேலைப் பார்த்து வந்துள்ளனர். அன்று மாலை சுமார் 3.15 மணிக்கு பாய்லர்கள் அதிக வெப்பத்தின் காரணமாக வெடித்து ஜிதேந்தர் மற்றும் குந்தன ஒசாரி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலயே இறந்துள்ள விட்டனர், மற்ற 2 பேர் அதாவது விதூர்,ஷாகில் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு குமிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிளக்கப்பட்டு மேல சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சப்பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த விசாரணையை சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து   விசாரணை நடத்தியதில் பாய்லரில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் உண்டாக்கி பின்பு 0 டிகிரி வெப்ப நிலையக்கு கொண்டு வந்து அதிலிருந்து துகள்களாகவும் ஆயிலாகவும், கம்பியாகவும் பிரித்து எடுப்பது இயல்பாகும். ஆனால் சம்பவத்தன்று ஞாயிற்றுக்க கிழமை என்பதால் பணி விரைந்து முடிக்கும் மன நிலையோடு அதன் உரிமையாளரும் . மேற்பார்வையாளரும் 0 டிகிரி வெப்ப நிலைக்கு பாய்ல்லை கொண்டு வராமல் தொடர் 100 டிகிரி வெப்ப நிலையிலயே இயக்கியதால்  இந்த அசாம்பாவித சம்பவம் நடந்துள்ளதாக மருத்துவ மனையில் ஆபாத்தான நிலையில ஃசிகிச்சைப் பெற்று வரும் விதூர்,மற்றும் ஷாகில் ஆகியோரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இது குறித்து தொடர் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here