காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம், செப். 7 –

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி நாள்தோறும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முக்கிய வீதிகளிலும், பஸ் நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய கடை வீதிகளான காமராஜர் வீதி, வணிகர் வீதி, நெல்லூக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் சுகாதாரப் பணியாளர்கள் கடை கடையாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகவல் குறித்து கேட்டறிந்து தகுதியான பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை அவர்களின் இடங்களுக்கே சென்று செலுத்தி வருகின்றனர்.

தங்களது பணி சுமையின் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் இருந்த வணிகர்களும் வாடிக்கையாளர்களும் நேரடியாக தங்களின் இடத்திற்கே வந்து தடுப்பூசி செலுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் செயலை வெகுவாக பாராட்டி,  தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here