மீஞ்சூர், டிச. 20 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வாரடு திமுக சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மீஞ்சூர் நகர கழக செயலாளர் தமிழ்உதயன் தலைமை வகித்தார் பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்

முன்னதாக இரண்டாவது வார்டு பகுதி அரியன்வாயல் பஜார் . மற்றும் கலைஞர் நகர் பகுதியில் பகுதியில் புதிய கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் அதனைத் தொடர்ந்து பஜார் பகுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டது

நிகழ்ச்சி ஏற்பாட்டை இரண்டாவது வார்டு திமுக செயலாளர் அனஸ். முன்னாள் வார்டு திமுக செயலாளர் ரியாஸ் அகமது. மாவட்ட சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் சையது முகம்மது. உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்

இதில் திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here