கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம், செப். 14 –

கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் சத்திய குமரன், கழக அமைப்புச் செயலாளர் வந்தியதேவன், மாவட்டச் செயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் அன்பு, தொகுதி செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜசேகர், காமராஜ் ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் செழியன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் முருகேசன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் கவியரசன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கிட்டப்பா, நகரச் செயலாளர் செந்தில், தலைமை கழக பேச்சாளர் தில்லை பாண்டுரங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடுவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். என வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் மூன்று வேளாண் சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் தீர்மானம், சி.ஏ.ஏ.,  என்.பி. ஆர். என்.ஆர்.சி. இச் சட்டத்திற்கு சட்டமன்றத்தில் தீர்மானம், நீட் நுழைவு தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை இக்கூட்டம் வழிமொழிதல் மற்றும் தமிழக அரசுக்கும் முதல்வர்க்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

மேலும், கடந்த செப் 12 ஆம் நாள் தமிழகம் முழுவதும் தமிழக அரசு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி மற்ற மாநிலத்தை விட முன் உதாரணமாகத் திகழ்ந்த தமிழக சுகாதாரத்துறை பாராட்டியும் அப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் முன் களப்பணியாளர்கள் அரசு ஊழியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தமிழகத்தில் நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள ஆடுதுறையில் வேளாண்மை கல்லூரி அமைக்க 20 ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தியும், சிறு அறுவை சிகிச்சை நோய்களை திருவிடைமருதூர் மருத்துவமனையிலே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுக்க வலியுறுத்தியும்,

இந்தியாவில் சர்வாதிகார போக்குடன் மோடி அரசு பேசன்ஜர் ரயில் மற்றும் முன்பதிவில்லா பயண சீட்டு முறையை கொரோனா காலத்தை காரணம் காட்டி நிறுத்தப்பட்டிருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக பேசன்ஜர் ரயில் மற்றும் முன்பதிவு பயணச் சீட்டு முறையை உடனே தொடங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,

கும்பகோணத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை மூன்று மாத காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி அனைத்து தெருக்களிலும் தரமான சாலை அமைத்திட நகராட்சியை வலியுறுத்தியும் அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் தலைவர் வைகோ அவர்களின் தவப்புதல்வன் சுற்றுச்சூழல் போராளி துரை வைகோ தமிழகம் முழுவதும் கழகத்தினரின் இன்பத் துன்ப நிகழ்ச்சிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா காலத்தில் மக்களுக்கு செய்த பொது தொண்டையும் சேவையை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் பேரூர் செயலாளர்கள் முன்னாள் இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் நகர ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here