ராமநாதபுரம், ஏப். 1-
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி திருவாடானை சட்டசபை தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்னையை நேரடியாக கேட்டு நான் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்று திருவாடானை மட்டுமின்றி ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தண்ணீர் பிரச்னையே ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என மக்களிடம் மனம் உருகி பேசியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, ஒவ்வொரு நாளும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில் ஒரு சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று ஊரின் எல்லையில் இறங்கி நடந்தே சென்று மக்களோடு மக்களாக ஜாதி மதம் பேதமின்றி மக்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண்பதற்கு முழு முயற்சி எடுப்பேன் என வாக்குறுதி அளித்து வருவது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் திருவாடானை சட்டசபை தொகுதியில் மங்களக்குடி, ஆண்டாவூரணி, எஸ்பி பட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியிகளில் வேட்பாளர் நவாஸ்கனி இறங்கி நடந்து சென்று மக்களிடம் பேசியபோது அங்கு திரண்டு இருந்த நுாற்றுக்கணக்கான மக்கள் வேட்பாளருக்கு ஆராத்தி எடுத்து நல்வரவேற்பு அளித்து தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை போன்ற அடிப்படை பிரச்னைகளை அடுக்கி கொண்டே சென்றனர். இதுவரை சட்டசபையிலும் லோக்சபாவிலும் மக்கள் பிரதிநதியாக சென்றவர்கள் திருவாடானையை கண்டு கொள்ளாமல் விட்டதால் நாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம் என கடும் ஆதங்கத்துடன் வேட்பாளரிடம் தெரிவித்தனர். அதற்கு வேட்பாளர் நவாஸ்கனி தற்போது எங்களது மதசார்பற்ற கூட்டணி தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் அமோக ஆதரவு பெற்று மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் . அதனால், இங்கு எனை வெற்றி பெற செய்தால், லோக்சபாவிற்கு சென்று திருவாடானை குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரக்க குரல் கொடுப்பேன். நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவன் எனக்கு நம் மாவட்ட மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் நன்கு தெரியும் எனவே அதை நிறைவேற்றுவேன் அதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும், என மனம் உருகி பேசினார். அதற்கு ஒட்டுமொத்த மக்களும் எங்களின் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக உண்டு நீங்கள்தான் வெற்றி பெறுவீர் இது உண்மை என மன மகிழ்வோடு தெரிவித்தனர்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆணிமுத்து, திமுக ஒன்றிய செயலாளர் சரவணன்,காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், நகர் தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் உதய பாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.