கும்பகோணம், பிப். 20 –

கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற உலக சாதனைக்கான வில் வித்தை போட்டியில், 5 வயது முதல் 25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில, 68,744 அம்புகள் எய்து புதிய சாதனை நிகழ்த்தினார்கள். இத்தொடர் சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும், கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  க்கூ ஆர். சரி மிஷன் தமிழ்நாடு மற்றும் விஜயன் ஸ்போர்ட்ஸ் அகெடமி சார்பில், இன்று கும்பகோணம் பாணாதுறை மேனிலைப்பள்ளி மைதானத்தில், வில் வித்தையில் உலக சாதனை புரியும் நிகழ்வு நடைபெற்றது.

  இதில் 05 வயது முதல் 25 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இச்சாதனை நிகழ்வில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தொடர்ந்து அம்பு எய்தினர்.

  இச்சாதனையில், 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில் 68,744 அம்புகளை பயன்படுத்தி இப்புதிய சாதனையினை படைத்துள்ளனர்.

  தொடர்ந்து மாலை நடைபெற்ற விழாவில், புதிய சாதனை படைத்த மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன், காவல் ஆய்வாளர்கள் கிழக்கு அழகேசன், சுவாமிமலை மகாலட்சுமி, தன்னார்வ தொண்டு நிறுவன மாவட்ட ஆளுநர் பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர்.

  இந்நிகழ்ச்சியில், வில்வித்தை பயிற்சியாளர்கள், மற்றும் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here