கும்பகோணம், ஆக. 04 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் மகாத்மா காந்தி குழந்தைகள் நலம் மற்றும் சமூக மருத்துவத்துறை சாா்பில்,  உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அரசு தலைமை கொறடா தலைமையில் நடைபெற்றது.

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் மகாத்மா காந்தி குழந்தைகள் நலச்சங்கம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் சமூக மருத்துவத்துறை இணைந்து நடத்திய உலகத் தாய்ப்பால் வார விழா அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய அரசு  கொறடா கோவி செழியன் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலகத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான உலகத் தாய்ப்பால் வார கருப்பொருள், தாய்ப்பாலை ஊக்குவிக்க முனைந்து முன் வருவீா், கற்போம்,  கை கொடுப்போம். என்பதாகும். குழந்தை பிறந்ததும் முதலில் சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு நோய் எதிா்ப்பு சக்தியைத் தருகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் அறிவுத்திறன் அதிகரிக்கிறது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது சரியான முறையில் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பின்னா் இரண்டு ஆண்டுகள் இணை உணவுடன் தாய்ப்பாலையும் சோத்து தர வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் பிணைப்பு அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தர ஜெயபால், மகாத்மா காந்தி குழந்தைகள் நல சங்க பொருளாளர் பாஸ்கரன், முன்னாள் தலைவர் தமிழரசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புனிதவள்ளி, தாய்ப்பால் விழிப்புணர்வு கூட்டமைப்பு தலைவர் மருத்துவர் சாம்பசிவம், ரோட்டரி சங்கம் தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் பெண்கள் பொது மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here