திருவாரூர். மார்ச். 09 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினவிழா     பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.ஐ.டி இயக்குநர் அகிலா அவ்விழாவில் உரை நிகழ்த்தினார். அப்போது, பெண்கள் சமூகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், வலைதளம், இணையம்  மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பெண்கள் எவ்வாறு சமூக விரோதிகளிடம் அகப்பட்டு கொள்கிறார்கள் என்பது குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய  பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் திருவாரூர், மத்திய பல்கலைக்கழகம் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், வருடம் தோறும் இங்கு பயிலக்கூடிய  மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற மாணவிகள் இணையத்தை பயன்படுத்தி  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில்  எவ்வாறு சேர்வது என்பது குறித்தும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவினைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த NIT இயக்குனர் அகிலா,

திருச்சி NIT-யில் கிராமப்புற மாணவர்களுக்கு JEE, NEET குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனவும், மேலும், NIT மாணவர்கள் திருச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து NEET போன்ற பொது தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கின்றனர் என்றும், மேலும், JEE  தேர்வு எழுதும் போது தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம் எனவும்,  டிஜிட்டல் டெக்னாலஜி மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here