தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.

 திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டி நேற்று  காலை ஆவடி அஜய் விளையாட்டு அரங்கத்திலிருந்து வேல்டெக் பல்கலைகழகம் வரை உள்ள சுமார் ஐந்து கி.மீ அளவு தூரம் கொண்ட மினி மாரத்தன் போட்டியாகும். இப்போட்டியை ஆவடி வேல்டெக் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் VVS குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பல்கலைகழக பதிவாளர் திருமதி.பிரேமா, இயக்குநர் டாக்டர்.E. கண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். சுமார் 250 மாணவ மாணவிகள் கலந்துக் கொண்ட இப் போட்டியில் 1 ஒன்று முதல் 10  வரையிலான பரிசுகளை வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தனிநபர் தகுதிகளுக்கான போட்டிகளும் வேல்டெக் பல்கலைக்கழகத்தின் வளாக விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது. அப் போட்டியில் கலந்து  கொண்ட மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளுடன் சான்றிதழும் வழங்கப்பட்டது. முதல் பரிசு கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி மாணவர் முகேஷ் , இரண்டாம் பரிசு  பொன்னேரி LNG அரசு கல்லூரி மாணவர் கவியரசன் , மூன்றாம் பரிசு வேல் டெக் பல்கலைகழக மாணவர் அபூப் சித்திக் பெற்றனர் போட்டிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு மாணவ மாணவிகளும் விளையாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் மற்றும் போக்குவரத்து துணை ஆய்வாளர் விஜய் ஆனந்தன் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here