திருவாரூர், ஜூன். 01 –

தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகமாக திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில் இப்பல்கலைக்கழக வளாகத்தில் உலகச் சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் தலைமையில் குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும், புவி வெப்பமயமாதலைக் குறைத்திடும் வகையிலும் உலகம் முழுவதும் மரம் நடும் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் உதவியுடன் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில்  குறுங்காடு அமைக்கும் முயற்சித் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

அதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மரக்கன்று நட்டு குறுங்காடு வளர்க்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்கலைக்கழக கழக பதிவாளர், வருவாய் கோட்டாட்சியர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்  உள்ளிட்ட பலரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் குறுங்காடு அமைக்கும் முயற்சியில் 2000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக பொறுப்பு அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில், நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் நிறத்திலான துனிப் பை வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here