திருவண்ணாமலை, செப்.8-

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது இதனையடுத்து கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவக்குழுவினர் பள்ளிக்கு சென்று அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

இதில் 2 பெண் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் பணிபுரியும் 15 ஆசிரியர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியை பூட்டி சீல் வைக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here