கும்பகோணம், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அம்மாசத்திரத்தில் சிவ சேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருவிடைமருதூர் தாலுகா, அம்மாசத்திரத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் சிவ சேனா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் பூக்கடை ஆனந்த், மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், கெளரவ தலைவர் சதீஷ்குமார், மாநகர தலைவர் லோகநாதன், மகளிரணி மாவட்ட தலைவி ராணி, மாநகர அமைப்பாளர் மரியா, மாவட்ட துணை தலைவர் ராஜகோபாலன், ஒன்றிய செயலாளர் சந்தோஷ், இளைஞரணி தலைவர் அகஸ்டின், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்க சிவசேனா கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கும்பகோணத்திலுள்ள 54 குளங்கள் மற்றும் அனைத்து நீர் நிலைகள் வாய்க்கால்கள் பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சிவசேனா கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு சிவசேனா கட்சி சார்பாக இந்தியாவை இந்து நாடாக அறிவிக்ககோரி இந்தியா முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதை பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்து ஒரே நாடு ஒரே தேசம் என்ற முழக்கத்துடன் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க கோரி சிவசேனா வலியுறுத்த உள்ளதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here