வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் – மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க வலியுறுத்தி குரல் முழக்கம்
உத்திரமேரூர், ஜன. 06 –
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கோழி ஊராட்சிப் பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் இக்கிராமத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது, இந்த வேலையில் அப்பகுதியில் வசிக்கும் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இதுக் குறித்து பெருங்கோழி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லையெனவும், இதனைத்தொடர்ந்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக அக்கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம பெண்கள் வந்தனர்.
ஆனால் அங்கு அரசு அலுவலர்கள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில்லும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.