பொன்னேரி, மார்ச். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல.

அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை நீடித்து வருகிறது.

பொதுமக்களின் நலன் கருதி அந்த பொது விநியோகக் கடையை விரைந்து திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறி பொன்னேரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம், வழக்கறிஞர்கள் அணி லெனின், திருநாவுக்கரசு, மதன், பொன்னேரி நகர பொருளாளர் வினோத், நகரத் துணைச் செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here