பாண்டிச்சேரி, பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி இந்துமதி மீது விக்னேஸ்வரன் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை வேலைக்கு விக்னேஸ்வரன் புறப்படும் போது மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.

பின்பு மனைவியின் இறப்பை உறுதி செய்துக் கொண்ட விக்னேஸ்வரன் அருகில் உள்ள கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அச்சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரணடைந்த விக்னேஷ்வரனிடம் போலீசார் தொடர்ந்து அப்படுகொலைக் குறித்து தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here