திருவாரூர், மே. 18 –
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மனைவி துர்கா தம்பதியனர் இவர்களது 18 வயது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை மகளின் தந்தை ஐயப்பன் பார்த்துவிட்டார்.
மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரிய வர மனைவி துர்கா வேலைக்கு வீட்டை விட்டு கிளம்பிய ஐயப்பன் தன் மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மகளின் கழுத்தில் நைலான் கயிற்றை கொண்டு கழுத்தை நன்றாக இறுக்கிப் நெரித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த மகள்
சுயநினைவு இல்லாமல் போகவே, ஒரு வாரமாக வீட்டில் வைத்தே மகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளார்கள். அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கடந்த மே14 ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகுமாரியை அழைத்து வந்துள்ளார்கள்.
அங்கு ஏன் கழுத்து நெரிக்கப்பட்டு உள்ளது என்ற போலீசாரின் கேள்விக்கு உயர் படிப்பு படிக்க மகள் கேட்டதாகவும் அதற்கு தனது கணவர் படிக்க வைக்க முடியாது என்று சொல்லியதாகவும் அதனால் என் மகள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என ஐயப்பன் மனைவித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி யாருக்கும் சொல்லாமல் துர்கா தன்னுடைய மகளை அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருடைய தந்தை ஐயப்பனும் அங்கு வந்து மகளை சேர்த்து விட்டு ஐயப்பன் தலைமறைவானார்.
அதைத் தொடர்ந்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் துர்கா நடந்த உண்மைச் சம்பவத்தை தெரிவித்து தனது கணவன் ஐயப்பன்தான் தனது மகளின் காதலுக்கு எதிப்பு தெரிவித்து அவளை கொல்ல முயற்ச்சித்தார் என புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் திருவாரூர் காவல் நிலையத்தில் ஐயப்பன் மீது கொலை செய்ய முயற்சி என்ற 307 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாகியுள்ள ஐயப்பனை காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.