திருவாரூர், நவ. 27 –

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக 46 அடியில் திமுக கொடியை ஏற்றி ரூ. 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திமுக மாவட்ட செயலாளர் பூண்டிக் கலைவாணன் வழங்கினார்.

மேலும், திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் பகுதியில் நடைப்பெற்ற நிகழ்வில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின் 46வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 46 அடி திமுக கொடி கம்பத்தில் கொடியினை ஏற்றிவைத்து, பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக கொரடாச்சேரி கடை தெருவில் வெடி வெடித்து மக்களுக்கு இணைப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி காய்கறிகள் தையல் இயந்திரம் தென்னை மரக்கன்றுகள் உள்ளிட்ட 20 லட்சம் மதிப்பிலான உதவிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள், பாலச்சந்தர், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here