கரந்தை, மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால்     வசிஷ்டேஸ்வரர் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோவில்கள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது,

இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி அம்மன் என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில்  தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து இருக்கிறார்,

தேவாரப்பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் உள்ளது,இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 9ந் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தினந்தோறும் படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஸ்ரீ சூரிய பிரபை வாகனம், ஸ்ரீ சந்திர பிரபை வாகனம் மற்றும் ஸ்ரீ பூத வாகனம், ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சுவாமிக்கு பூஜைகள் செய்து வீதி உலா நடைபெற்றது,

அதைப் போல் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று  வெகு சிறப்பாக நடைபெற்றது, ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், முன்னதாக  சுவாமிக்கு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் இசைக்க மகாதீபாரதனை காட்டப்பட்டது, பின்னர் சுவாமியை பல்லக்குகளில் வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து கோவிலில் பிரகாரம் வலம் வந்து பின்னர் பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடி திருத்தேரோட்டம் வீதி உலா நடைபெற்றது,

இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here