ஆவடி, மார்ச், 18 –

இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் தேசிய கொடியை கையிலேந்தியும், மூவண்ண நிறத்தில் ஹிஜாப்  அணிந்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இயக்கம் சார்பில் ஆவடியில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஹிஜாப் பிற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பினை கண்டித்து குரலெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஹிஜாப்பிற்கு எதிரான,  கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் அவர்கள் குற்றம் சாட்டி குரலெழுப்பினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தவ்ஹீத் ஜமாஅத் -ன் மாநில பொது செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் தலைமையில் ஆவடி மாநகராட்சி அருகில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரவாயில் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர்  பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்டோர் குறிப்பாக பென்கள் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து கொண்டு கைகளில் கர்நாடக நீதிமன்றத்துக்கு எதிரான வாசகங்களை பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டு கர்நாடக நீதிமன்றத்தீர்ப்பு ஒருதலைப்பட்ச செயல்பாட்டிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் தங்கள் கண்டனத்தை முழக்கங்கள் வாயிலாக தெரிவித்தனர் .

ஆர்பாட்டம் மேடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் பேசுகையில்.

காலம் காலமாக பள்ளிக்கூடங்கள் நடைபெற்றாலும், அப்பள்ளிகளுக்கு காலம் காலமாக கல்வி பயிலச்செல்லும் முஸ்லிம் பெண்கள் தலை முக்காடு போடக்கூடிய வழக்கம் இருந்தாலும், பாஜக அரசு எப்போது மத்தியில் ஆட்சியை அமைத்து பெரும்பான்மயை கைப்பற்றுகிறதோ  அப்போது தான் இது பிரச்சனையாக மாறுகிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர். நாங்கள் ஆர்ப்பாட்டம் என்று இங்கே கூடி நிற்கின்றோம் என்றால் எங்களுடைய உரிமைக்காக தான் எனவும்,    சட்டத்தின் துணைகொண்டு பாசிச பாஜக அரசு எங்கள் உரிமைகள் மீது கைவைக்கும் போதும், ஒவ்வொரு உரிமைகளாக எங்களிடமிருந்து பறித்துக் கொண்டே  இருக்கின்றது. அதை எதிர்த்து ஜனநாயக பூர்வமான வழிமுறைகளை உடனே எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம் என பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here