இராமநாதபுரம்  மாவட்டம் S.D.P.I கட்சியின் புதியநிர்வகத் தேர்வு அம்மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இராமநாதபுரம்; ஜூலை, 26- சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா

( SDPI ) கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு  மண்டல தலைவர் அஹமதுநவவி  தலைமையில் 25-7-2019 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இச் செயற்குழுவில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

 (1)புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு

 

SDPI கட்சியின்  இராமநாதபுரம் கிழக்கு மற்றும் இராமநாதபுரம் மேற்கு ஆகிய இரு மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு , புதிய  ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் என்ற ஒற்றை மாவட்டமாக செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் , செயற்குழுவால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

மாவட்டதலைவர்- MI.நூர்ஜியாவுதீன்

மாவட்ட துணைத்தலைவர்கள்

M.சோமு

J.முஹம்மதுசுலைமான் Expand

 

மாவட்ட பொதுச்செயலாளர்- S.செய்யதுஇப்ராஹீம்

 

மாவட்ட பொருளாளர்- 

முஹம்மதுரபீக்

 

மாவட்ட செயலாளர்கள்- 

வண்ணை அஸ்கர் அலி

முஹம்மது இஸ்ஹாக்

அலிமுத்து

ஹமீது இப்ராஹீம் NEWS & MEDIA

பைரோஸ்கான்

 

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்-

Aஅப்துல் வஹாப் PRO

பரக்கத்துல்லாஹ் Social Media

செய்யது ஹாலிது

சுல்தான்

அபுல் கலாம் ஆசாத்

 

 

(2)  உள்ளாட்சி தேர்தல்;

 

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக செயற்குழுவால் விரிவாக விவாதிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

 

 (3).  தண்ணீர்ப்பிரச்சினைக்குத்தீர்வு காண வேண்டும்

 

தண்ணீர் பிரச்சினையால் தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இராமநாதபுரம் மாவட்டமும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து தீர்வு காண முற்பட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் இதில் மாவட்ட நிர்வாகம் தவறும் பட்சத்தில் மாவட்டம் தழுவிய தொடர் போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here