காஞ்சிபுரம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில், இன்று அறிவியல் கண்காட்சி மற்றும் தமிழர் பண்பாடு குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அக் கண்காட்சியில் தமிழ் மரபு சார்ந்த பொருட்களும் மற்றும் கணினி, இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பல்வேறு செயல்முறை விளக்கங்களோடு கூடிய பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. மேலும் அப்பள்ளியில் சுமார் 430 மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவில் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 120 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இங்கு இது போன்ற கண்காட்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மாணவ மாணவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் அறிவில் சார்ந்த விஷயங்கள் குறித்தும் ஆசிரியர்களிடமும் பொதுமக்களிடமும் அம்மாணாக்கர்கள் விளக்கி கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மாணவர்களுக்கு படிப்பைக் காட்டிலும் இது போன்ற பல்வேறு விதமான கண்காட்சிகள் மூலம் அவர்களுடைய அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது. முன்னதாக அப்பகுதியை சேர்ந்த மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் மாநகராட்சி கவுன்சிலர் . கார்த்திக் கலந்துக் கொண்டு மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி தமது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் அவ் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளி தாளாளர் துரைவேலு, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் திவ்யபாரதி ஆகியோர் வெகுச்சிற்பாக செய்து இருந்தனர்.