திருவாரூர், டிச. 02 –

திருவாரூர் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு வன்னியர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கினர். இதில் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த முதல்வராக அன்புமணி ராமதாஸ் வர வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிகழ்வின் முன்னதாக காலை 10 மணிக்கு மாவட்ட எல்லையான குடவாசல் அத்திகடையில் மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பினை மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்  ஏற்பாடு செய்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு சிமிழி கிராமத்தில் உள்ள வன்னியர் சங்க பொறுப்பாளர் பெரியசாமி இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு அதன் பிறகு திருவாரூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி  செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை பார்த்து கேட்கிறோம் மக்களின் மனக்குமுறலை அதிகமாக்காதீர்கள் மக்களுக்கு செய்ய வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளுங்கள், எனவும்,

கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் விரைவாக விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டும், மேலும் முதல்வரின் தந்தை பிறந்த மாவட்டம் திருவாரூர் மாவட்டம் எனவும் எனவே அதனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் உரியக் கவனத்தை இம்மாவட்டத்திற்கு கொடுக்க வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தற்போது பெய்த தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நெற்பயிர் ஏக்கருக்கு 50,000 நிவாரணமும், வாழை மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு இரண்டு லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும். இதைக் கொடுத்துவிட்டு அடுத்த வெள்ளம் வருவதற்கு முன்பு வெள்ளம் தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இல்லையென்றால் மக்கள் அவர்களின் கோபத்தை தேர்தலின் போது உங்களிடம் காட்டுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், யூரியா தட்டுப்பாடு குறித்து மத்திய அரசாங்கத்திடம் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  வன்னியர் சங்க மாநில செயலாளர் அய்யாசாமி, திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் பாலு, வடக்கு மாவட்ட தலைவர் முகம்மதுபாரி, தெற்கு மாவட்ட தலைவர் கங்காதரன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் வேணு.பாஸ்கர், பாமக நகர செயலாளர் ராஜேந்திரன், வன்னியர் சங்க நகர செயலாளர் ராஜநிதி மற்றும் மகளீரணி பொறுப்பாளர்கள், பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

 

பேட்டி: பு.த.அருள்மொழி மாநிலத்தலைவர் வன்னியர் சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here