காஞ்சிபுரம், ஜன. 21-
பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் கூட்டாளியும், கூலிப்படை தலைவனுமான தியாகு என்ற தியாகராஜனை நேற்று சிறப்பு தனிப்பிரிவு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை ஹரியானாவில் கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டனர்
தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்
ரவுடி தியாகு மீது 11 கொலை, 15 கொலை முயற்சி வழக்கு என 63 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.