இராணிப்பேட்டை, ஏப். 15 –
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த பிப் 8 ஆம் தேதி 2023 அன்று செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலன் குறித்த செயல்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நிலையில் அதனுடன் மேலும் மக்களின் நலன் கருதி அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் படிப்பதற்காக நூலகம் திறந்திடும் படி புதுமையான அறிவுறுத்தலை வழங்கினார்.
அதன் முதற்கட்டமாக நேற்று இராணிப்பேட்டை உட்கோட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அக்காவல் நிலைய ஆய்வாளர் விநாயமூர்த்தி ( சுழிப் போட ) முன்னெடுப்பின் படி அந்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்காக ஒரு நூலகம் அம்மைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைப்பெற்றது.
மேலும் இராணிப்பேட்டை உட்கோட்டம் ஆற்காடு காவல்நிலையத்தில் நடைப்பெற்ற நூலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பங்கேற்ற முனைவர் எம்.எஸ். முத்துச்சாமி ஐ.பி.எஸ் தலைமையில் அந் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் அந்நிகழ்வில் உரை நிகழ்த்திய உயர் காவல் அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து இதுப்போன்ற நூலகத்தை அனைத்து காவல் நிலையங்களிலும் அமைத்து செயல்படுத்த வேண்டுமென அப்போது அறிவுறுத்தினார்கள். மேலும் அப்போது இந்நூலகத்தில் உள்ள புத்தகங்களை புகார் அளிக்க வரும் பொதுமக்கள் வாசிப்பதால் காவல் நிலையம் என்றால் கண்டிப்பு என்ற மனநிலை மாறி மேலும் அம்மக்களிடம் காவல்துறை என்றால் கனிவையும் உள்ளடக்கியது என்பது தெரிய வரும், எனவும், மேலும் இதனால் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுப்படத் தூண்டும் மனநிலை அம்மக்கள் மனதிலிருந்து நீங்கும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் புத்தக வாசிப்பு என்பது அறிவுத்திறன் பெருகுவதோடு அவர்கள்தம் வாழ்க்கைத் தரம் உயர்ந்து நல்வழியில் வாழ்க்கைப் பாதை அமைய வழி வகுக்கும் என்றவாறும் அப்போது அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மேலும் வெகு சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி, தலைமையிடம் கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு நகரக் காவல்நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார், மேலும் உதவி ஆய்வாளர்கள், மற்றும் தலைமைக்காவலர்கள், காவலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இதுப்போன்ற மக்கள் நல திட்டங்கள் வெற்றிப்பெற அப்பகுதி மக்கள் தங்கள் மனமகிழ்வு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.