புதுச்சேரி, மே.12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சத்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 65-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு பூஜை செய்து அவரை வழிபட்டார்.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேலும், அவரது ஆன்மீக குருவான ஸ்ரீ அப்பா பைத்தியம் சாமிக்கு திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள  அவரது இல்லம் அருகே கோவில் கட்டி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீ அப்பா பைத்தியம் சாமியின் 65-வது குரு பூஜையை முன்னிட்டு இன்று கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளை நடத்தப்பட்டது, முதலமைச்சர் ரங்கசாமி பூஜைகளை செய்து வழிபாடு நடத்தி பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

மேலும் அக் குருபூஜை விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here