கும்பகோணம், ஜன. 06 –

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் நூறு நாட்களில் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், 600 நாட்கள் கடந்த பின்பும் இதுவரை அமைத்திடாத நிலையில், அவருக்கு நினைவூட்டும் வகையில்,  ஆடுதுறை அஞ்சலகத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் நூதன போராட்டம் நடைபெற்றது.

திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாரப்பகுதியில் உள்ள ஒரத்தநாடு மற்றும் திருக்கடையூர் பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில், திமுக ஆட்சி அமைத்தவுடன் நூறு நாட்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்குவோம் என்ற உறுதி மொழியளித்தார்.

ஆனால் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்து 600 நாட்களை கடந்துள்ள நிலையில்,இதுவரை கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் மாவட்டத்தை உருவாக்கவில்லை எனவும், மேலும் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியையே கண்டுகொள்ளாமலும், இருப்பதை அவருக்கு நினைவூட்டும் வகையில், கும்பகோணம் மாநகர பொதுமக்கள் சார்பில் ஒரு இலட்சம் நினைவூட்டல் கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வரும் எதிர் வரும் 09 ஆம் தேதி நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது, இதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஆடுதுறை அஞ்சலகத்தில் இருந்து ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் நூதன போராட்டம், இப்போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,  கும்பகோணத்தை மாவட்டமாக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி  1 லட்சம் தபால் கார்டுகள் அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து கும்பகோணத்தை மாவட்டமாக்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தபால் கார்டுகளை  கைகளில் ஏந்தி  ஊர்வலமாக வந்து ஆடுதுறை தபால்நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வின் போது பாமக மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், பாஜக மாவட்ட தலைவர் சதீஷ், வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகர், தேமுதிக ஒன்றிய செயலாளர் செல்வம், அமமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஆடுதுறை வர்த்தக சங்க தலைவர் சண்முகம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன்,பட்டிமன்ற நடுவர் அழகு பன்னீர் செல்வம், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், குடந்தை வர்த்தக சங்க தலைவர் கே.எஸ்.சேகர், வன்னியர் சங்க மாவட்ட  செயலாளர்கள் மதிவில், ராம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முருகானந்தம், சந்தானம், தமிழ் மாநில தேசிய லீக் பொறுப்பாளர் ஹாஜாமைதீன்,  ஆடுதுறை பேரூராட்சி உறுப்பினர்கள் முத்துபீவி ஷாஜஹான், பாலதண்டாயுதம், பரமேஸ்வரி சரவணக்குமார், மீனாட்சி முனுசாமி, மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் ஆகியோர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here