மீஞ்சூர், ஆக. 30 –
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளை வழங்கிட அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக துரை.சந்திரசேகர் விரைந்து செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து அவர் ஆரணி பேரூராட்சி, பொன்னேரி நகராட்சி, உள்ளிட்ட இடங்களில் அவர் தலையிலான மக்கள் குறை கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக நேற்று மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறை கேட்பு கூட்டத்தை அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தினார். அக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ். துணைத்தலைவர் அலெக்சாண்டர். பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு. மீஞ்சூர் திமுகநகர செயலாளர் தமிழ்உதயன். முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ். உள்ளிட்டர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மீஞ்சூர் பகுதிக்கு நிரந்தர மார்க்கெட் வசதி வேண்டும். சீமாவரம் ஆற்றில் மேம்பாலம் அமைத்தல். பாதாள சாக்கடை திட்டம். ரயில்வே மேம்பாலம் பணி விரைந்து முடிக்க வேண்டியும். பேரூராட்சியில் கட்டணக் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை பொதுமக்களிடம் இருந்து மனுக்களாக பெற்றுக்கொண்டார். இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.





















