திருவள்ளூர், டிச. 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதிப்புகளுக்கு உள்ளானர்கள்.
பட்டமந்திரி பகுதியில் அமைந்துள்ள மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலை வெகு நாட்களாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பெய்த பெரும் மழையில் மேலும் சிதிலமடைந்து வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது,
இதுக்குறித்து பலமுறை உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகம், துறைச்சார்ந்த அலுவலர்களின் கவனத்திற்கு மனு மற்றும் வாய்மொழி வாயிலாக கொண்டு சென்றும், எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என சாலை மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்ந்து சிரமத்துடன் இச்சாலையில் பயணிக்கும் எங்களுக்கு உடனடி தீர்வு வேண்டும் என்பதால் எங்கள் பகுதி கிராம்மக்கள் ஒன்றிணைந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி, மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதற்கான ஏற்பாடு செய்து குண்டும் குழியுமான பகுதிகளுக்கு சரலை கற்களை கொண்டு நிரப்பி வாகனங்கள் பயணித்து வந்த நிலையில், மழை முடிந்த பிறகு பல்ளங்களில் போடப்பட்ட சரலை கற்களின் மீது வாகனங்கள் செல்லும் பொழுது வெகுவாக தூசி பறந்து அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் புழுதி படிவதால், வீட்டிலிருக்கும் உணவுப்பொருட்கள் உள்ளிட்டப் பொருட்கள் மற்றும் சிறுக்குழந்தைகள் முதல் முதியவர்கள் உடல்நிலைப் பாதிப்புக்குள்ளானவர்கள் என அனைவரும் வெகுவாக பாதிக்கப்படுவதால் அப்பகுதியில் நிரந்தர சாலை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தவர்களிடம் மீஞ்சூர் காவல்துறையினர் சமரசப் பேர்த்து வார்த்தை நடத்தினார்கள். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற அப்போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.