கும்பகோணம், மார்ச். 19

கும்பகோணம் அருகே மேலக்காவேரி கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் நேற்றிரவு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

கும்பகோணம் அருகே மேலக்காவேரி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலம், கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலாகும், நேற்றிரவு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் கற்பகாம்பாள் மற்றும் கைலாநாதர் ஆகியோர் விசேஷ மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, முதலில் மாலை மாற்றும் வைபவமும், பின்னர் சீர்வரிசை சமர்ப்பித்தல், நலுங்கு வைத்தல் நிகழ்வு ஆகியவும் நடைபெற்ற பிறகு, சிறப்பு ஹோமம் வளர்த்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, கற்பகாம்பிகைக்கு மங்கல நாண் பூட்ட, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here