தஞ்சாவூர், பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து நான்கு நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதுப்போல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பூதலூர் பட்டுக்கோட்டை பேராவூரணி செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செய்த சம்பா சாகுபடிகள் தண்ணீர் இன்றி காயத் தொடங்கியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்காமல் திருவாரூர் நாகை மாவட்டத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் தமிழக அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் உடனடியாக தஞ்சையில் காயும் பயிர்களை காப்பாற்ற ஒரு முறையாவது தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் திறக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.

மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மேற்கு குழு.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here