கும்பகோணம், ஜூலை. 02 –

கும்பகோணம் மாநகரத்தின் காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமானது, கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.

மேலும், ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை அழித்த பின்னர் காவிரி தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு பிரம்மனின் கையில் வந்தமர்ந்ததாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

தொடர்ந்து, பிரம்மா அச்சக்ரத்தினை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்தலம் எனவும், மேலும் இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமிக்கு செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி, குங்குமம் ஆகிய பொருட்கள் கொண்டு அர்ச்சணை செய்யப்படுவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

மேலும் இத்தலத்தினை. சூரியன், பிரம்மன், மார்கண்டேயர், அக்னிபகவான், அகிர்புதன்ய மகரிஷி ஆகியோர் வழிபட்ட புனித தலமாகவும் இது விளங்குகிறது. என இத்திருத்தல வரலாறு கூறுகிறது.

இத்தகு சிறப்பு மிக்க இவ் வைணவத் தலத்தில், ஆண்டு தோறும் ஆனி பௌர்ணமி வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கமாகும். அது போல இவ்வாண்டும் இவ்வசந்த உற்சவத்தை முன்னிட்டு 3 வது நாளாக வசந்த மண்டபத்தில், அருள்மிகு ஸ்ரீசக்கரபாணி சுவாமி எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் இக்காட்சியினைக் காண ஏராளமான பக்தர்கள் வருகைத் தந்து, சுவாமி தரிசனம் செய்து மனம் மகிழ்ந்து வழிப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here