பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நல்.செந்தில்குமார்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டுபிடித்து தனது கிராமத்தையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.

மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக்குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜெ.ஆர்.கே ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். கம்பம் மூர்த்தி படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here