கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த டிச 30 ல் அனுசரிக்கப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு பூமாலைச்சூடி, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார்கள் தொடர்ந்து அவரது திருவுருப்பட்டத்திற்கு முன்பு நின்று அக்கட்சியினர் இயற்கை வேளாண்மை செய்வோம் என உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி, மரபு விவசாயம் காத்தவரும், பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுத்தவரும், விவசாயத்தையும், விவசாயிகளையும் அடியோடு அழித்தொழிக்கும், மீத்தேன், ஹெட்ரோ கார்பன் போன்ற நாசக்கார திட்டங்கள் காவிரி டெல்டாவிற்கு வரவிடாமல் தடுக்க பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர் காலஞ்சென்ற ஐயா நம்மாழ்வார் அவரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பழைய மீன் மார்க்கெட் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் தெற்கு தொகுதி செயலாளர் ராஜராஜன், தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதில் நம்மாழ்வார், திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், அவரது நினைவுகளை போற்றி வீர முழக்கங்களையும் எழுப்பி, விவசாயிகளான நாம், உலகிற்கு, நம்மாழ்வார் வழியில், நஞ்சில்லா உணவு வழங்க, இயற்கை விவசாய முறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் என உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.
மேலும் அந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹுமாயூன், மணி செந்தில், மதி பாலா, தெற்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன், நடுவன் தொகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், சுந்தர்ராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆனந்த், சுவாமிநாதன், அசோக், அருண்குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து 200 பயனாளிகளுக்கு அந்நாளில் மரக்கன்றுகளை அவர்கள் வழங்கினார்கள்.