கும்பகோணம், ஏப். 14 –

கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்  எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார்.

இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் உரை நிகழ்த்தினார் அப்போது, நாம்  வாட்ஸப்பில் மத ரீதியாக வரும்  தகவல்களை பார்க்க வேண்டாம் எனவும், அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், நாம் அனைவரும் இந்திய மண்ணின் மைந்தர்கள் என்ற எண்ணம் மனதில் வந்தால்தான் வருங்கால சந்ததிகளை பாதுகாப்பாக அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும், பல கட்டிடங்கள், பல கோடி மதிப்பிலான சொத்துக்கள், உடமை, மற்றும் உயிருக்கு போன்றவற்றிற்கு பாதுகாப்பு வைத்துக் கொள்வது மட்டும் பாதுகாப்பு அல்ல எனவும்,  நாம் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களையும் மதிக்க வேண்டும்  மாற்று மத சகோதரர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்று நினைவில் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அபுபக்கர் தனது சொந்த நிதியில் இருந்து மேலக்காவேரி பகுதி மக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு காரும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு புடவை கைலி ரொக்கப்பணம் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய ஹஜ் கமிட்டி தலைவர்

அபுபக்கர் இவ்வாண்டு ஹஜ் பயணம் நிச்சயமாக நடைபெறும் என்றும் இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் அதில் எந்தெந்த மாநிலத்திலிருந்து எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்று இன்னும் இரு தினங்களில் டெல்லியில் நடைபெறும் ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் செய்வதற்கு உத்தரவு கிடைக்கும் என்றும் எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்களோ  அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹஜ் பயணத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துக் கொள்கிறதா என்ற செய்தியாளர் கேள்விக்கு நிச்சயமாக இல்லை என்றும் ஹஜ் மானியம் நிறுத்தியது இந்த அரசு இல்லை என்றும் அதற்கு உச்ச நீதிமன்றம் தான் காரணம் என்றும் ஹஜ் பயண விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அபுபக்கர் கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here