கும்பகோணம், மார்ச். 18 –
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலிருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19ம் ஆண்டாக மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பயணம் சென்றனர்.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதல்மை தலமாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஆலயத்தில் வழிபாடு செய்து வருகின்றனர்
அதேபோன்று கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், திருநறையூர், சமத்தனார்குடி, செம்பியவரம்பல், கோவனூர், கொத்தங்குடி, திருப்பந்துறை, பருத்திச்சேரி, ஆரியச்சேரி, போன்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் 48 நாட்கள் மாலை அணிந்து விரதமிருந்து நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற முழக்கத்துடன் பாதயாத்திரையாக கும்பகோணம் சுவாமிமலை திருவையாறு திருக்காட்டுப்பள்ளி வழியாக பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சமயபுரம் சென்று வழிபடு செய்கின்றனர் இந்த பாதயாத்திரை குழுவினர் மாலை அணிந்தும் விரதம் இருந்தும் 19 ஆண்டுகளாக தொடர்ந்து பாதயாத்திரையாக சென்று சமயபுரம் மாரியம்மனை வழிபாடு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.