இந்திய ஜனாதிபதியின் விமானம் தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 9 ஆம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக பாகிஸ்தான் வான்வழியாக செல்ல  அந்நாட்டிடம் இந்திய வெளியுறவுத்துறை  அனுமதி கோரியது. ஆனால், தங்கள் நாட்டு வான்பரப்பில் இந்திய ஜனாதிபதி செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடத்தையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார்.  காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here