சென்னை, ஆக. 05 –  

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று அந்நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் முள்ளுருடன் கலந்துரையாடினார்.

மேலும் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் என்னென்ன விதமான காய்கறிகள் மற்றும் பலவகைளை இறக்குமதி செய்யப்படுவது குறித்தும், அதனை தரம் பிரித்து மதிப்பு கூட்டி எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறதெனவும் அமைச்சர் அவரிடம் தொழில் நுட்பம் மற்றும் வியாபார யுக்திகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஞெயலாளர் – வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூரத்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி உள்ளிட்டவர்களும், அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் திவ்யா தோந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here