பூவிருந்தவல்லி, ஏப். 08 –

பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அக்கழிவுநீரில் லட்சக்கணக்கான புழுக்கள் உற்பத்திப் பெருக்கம் அடைந்து அப்பகுதி குடியிருப்புகளில் புகுவதால் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குடபட்ட 1வது வார்டு மேல்மாநகர் பஜனை கோயில் தெரு பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களும் முறையாக கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யப் படாததால், கழிவுநீர்கள் வெளியேறாமல் ஆங்காங்கே அப்படியே தேங்கி துற்நாற்றமும், அக்கழிவு நீர் கால்வாய்களில் இலட்சகணக்கான புழுக்கள் உற்பத்தி பெருக்கமும் அடைந்து, குடியிருப்புக்குள் புகுவதால் நோய் தொற்ற ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், 1வது வார்டு மேல்மாநகர் பகுதியில் இருந்து இரண்டாவது வார்டு முத்தமிழ் நகர் வழியாக செல்லும் கால்வாய் நெடுஞ்சாலை வழியாக கூவம் நதியை சென்றடையும் இந்த நிலையில் 2-வது வார்டு பகுதியில் இணைப்பு கால்வாயை தூர் வாராததால் பஜனை கோவில் தெருவில் கால்வாய் நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கின்றது. உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் பூவிருந்தவல்லி நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here