திருவாரூர், ஜன. 22 –

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் பெயரை இனி உச்சரிக்காமல் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியாது எனவும், மேலும் தற்போது மு.க.ஸ்டாலின் அதிமுக நிறுவனத்தலைவர் எம் ஜி ஆரை தனது பெரியப்பா என்றவாறு உரிமை கொண்டாடுகிறார் எனவும்,

மேலும், புரட்சித்தலைவர் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்த பொழுது நிதி பற்றாக்குறை வரும் என அதிகாரிகள் கூறிய போது பிச்சை எடுத்தாவது இத்திட்டத்தை செயல்படுத்துவேன் என தெரிவித்தார். எனவும்,

அதுப்போன்று நிதி பற்றாக்குறை ஏற்பட்டாலும் பரவாயில்லை, எனத் தெரிவித்து, புரட்சித்தலைவி அம்மா இலவச அரிசி திட்டத்தை நாட்டு மக்களுக்காக செயல்படுத்தினார். எனவும்,

அதனைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடியார் நிதி பற்றாக்குறை ஏற்பட்டாலும் பரவாயில்லை கொரோனா போன்ற நெருக்கடிகளால் மக்கள் துன்புற்று இருக்கிறார்கள் என குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாய் வழங்கினார் எனவும்,

ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் நடைப்பெற்று வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நிதி பற்றாக்குறை என்று கூறிக்கொண்டு ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடக்கி வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இனி எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அதிமுகவை வெற்றி அடைய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவும், ஈரோடு கிழக்கு தொகுதி, அதிமுகவின் வெற்றி கோட்டையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அப்போது தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஆர்.டி .மூர்த்தி,  இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிமுக தொண்டர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here