மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்….
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுத்தேர்வு முடிவுகளில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 231 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயலட்சுமி என்ற மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இதே போல் வைத்தீஸ்வரன் கோயில் குருஞானசம்பந்தர் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரம் ஆதினத்தில் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு தலைவர் ஆடிட்டர் ராஜேஷ், பள்ளி செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், முதல்வர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.