செங்கல்பட்டு, மே. 21 –

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை ஊழியார்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அத்துறை சார்பில், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய கரும்புள்ளி எனப் படும் பல்வேறு இடங்களை கண்டறிந்து,  விபத்துக்களை தடுப்பதற்கும் மேலும் குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி அப்பகுதிகளில் உள்ள சாலை வளைவு, மருத்துவமனை, பள்ளிகள், மற்றும் பொதுமக்கள் அடிக்கடி நெடுஞ்சாலையை கடந்துச் செல்லும் பகுதி மற்றும் சாலைகளின் ( சென்டர் மீடியன் ) நடுவில் நடப்பட்டுள்ள மரங்களை போக்குவரத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் மேலும் விபத்துக்களை ஏற்படுத்தாத படி அதனை பராமரிக்கும் பணிகளில் தற்போது நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மேற் கொண்டு வருகின்றனர்.

அதன் பகுதியாக தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள சாலையில் நடுவே உள்ள மர கிளைகளை வெட்டும் பணியில் நெடுஞ்சாலைதுறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை – திருச்சி மற்றும், திருச்சி – சென்னை இரண்டு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஏராளமான மரங்கள் உள்ளது இம்மரங்கள் மிக உயரமாக வளர்ந்தும் அதன் கிளைகள் போக்குவரத்து சாலை பகுதிகளில் படர்ந்தும் விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதைக் கண்டறிந்து, அச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஒட்டிகளின் கடும் சிரமத்தினை த்தடுத்திடும் வகையில் அப்பகுதியில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக செங்கல்பட்டு அருகே துவங்கிய இப் பணி தொடர்ந்து மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மல்ராசபுரம், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர்,  பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதியிலும் மேற் கொள்ளப்படும் என நெடுஞாசாலைத் துறை உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுப்போன்ற சாலை விபத்துகளை கணிசமாக தடுக்கும் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here