திருவாரூர், ஏப். 05 –
திருவாரூர் பகுதியில் உள்ள “ஓடை பிள்ளையார் ” என்று அழைக்க கூடிய அருள்மிகு சுவேத விநாயகர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 1, சனிக்கிழமை அனுக்ஞை பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து நான்கு கால யாக பூஜை நடைபெற்றது.
மேலும், இன்று காலை நான்காம் கால பூஜை நடைபெற்றதை தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு.. வேத மந்திரங்கள் ஓத கோவிலை வலம் வந்து ஆலய விமானம் சென்று அடைந்தது.
தொடர்ந்து சரியாக 9:20 மணி அளவில் ஸ்வேத விநாயகர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் பரிவார தெய்வங்களின் கருவறை விமானங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் சுவேதவிநாயகர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.