பெரியப்பாளையம், பிப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்திற்கு அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக  நடைபெற்றது.

முன்னதாக மகா கும்பபிஷேக நிகழ்வினை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை,  கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி மற்றும்  கோபூஜை,  ரக்ஷாவந்தனம், நாடிசந்தனம்,  மகாபுர்ணாஹூதி உள்ளிட்ட யாகசாலை சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் தங்களது சிறசியில்  சுமந்து கொண்டு ஆலய மாடவீதி உலா வந்து பின்னர் கோபுர விமானம்,  மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்த தொடர்ந்து அவ்விழாவில் பங்கேற்க வந்திருந்த உள்ளூர் மற்றும் சுற்றி வட்டாரக் கிராமங்களைச் சார்ந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு  பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்து  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அச்சிறப்புமிகு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் ஆலய நிர்வாகிகள்,  பொறுப்பாளர்கள், சுற்று வட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து மனமுருகி இறை மற்றும் கோபுர வழிப்பாடுகள் செய்தனர்.

முன்னதாக அவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஆலயம் சார்பில் முழு கும்ப மரியாதை செலுத்தினர். மேலும் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையையும் ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா முருகன், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பிரபு மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட விழா குழுவினர்கள் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் நிறைவில் ஆலயம் சார்பில்  பக்தர்கள் அனைவருக்கும் சுவையான அருசுவை உணவு பரிமாறப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here