தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது மனைவி பிரேமா (வயது 50 ). இந்த நிலையில் இன்று பிரேமா தஞ்சையில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்துள்ளார். மேலும் அம் மோட்டார் சைக்கிளை அவரது தங்கை மகன் முகிலேஸ்வரன் (14) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை பாலம் அருகே அவர்கள் வந்துக்கொண்டுருந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதிவுள்ளது. இதில் லாரியின் டயருக்குள் சிக்கிக்கொண்ட பிரேமா உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவ்வபத்தில் முகிலேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவுள்ளார்.
அவ்விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்நிலைய போலீசார் லாரியின் இடிபாடுக்குள் சிக்கி கிடந்த பிரேமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவ் விபத்தால் அப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அவ்விபத்துக் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது, விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி இதுப்போன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும், போக்குவரத்து காவல்துறையினர் இதுப்போன்று தொடர்ந்து ஏற்படும் விபத்து பகுதிகளை கண்டறிந்து வேகத்தடைகளை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.