தஞ்சாவூர், ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு விட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

ரெட்டி பாளையம், களிமேடு, வண்ணாரப்பேட்டை, சீராளூர், கள்ள பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

அதனால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், விளைநிலங்கள் காய்ந்து புல், வைக்கோல் இல்லாமல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் தவித்து வருவதாக கூறிய கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், கால்நடைகள் மெலிந்து வருவதால் பால் உற்பத்தி குறைந்து விட்டது. இன்னும் கொஞ்சம் நாளில் சூழ்நிலை எப்படி மாற போகுது என தெரியவில்லை என விவசாயி பழனிச்சாமி அச்சம் தெரிவித்தார்.

ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாரி ஆழப்படுத்தி இருந்தால் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமித்து இருக்கலாம். அந்த தண்ணீர் மழை இல்லாத காலங்களில் அனைவருக்கும் பயன்படும் என சமுக ஆர்வலர் நல்லதுரை தெரிவித்தார்.

நல்லதுரை , சமுக ஆர்வலர், தென்னங்குடி, பழனிச்சாமி விவசாயி ரெட்டிபாளையம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here